2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

எழுவைதீவு துறைமுகம் தற்காலிக புனரமைப்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 23 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட எழுவைதீவு இறங்கு துறைமுகம், இலங்கை மின்சார சபையினால் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நீண்ட காலமாக புனரமைப்பின்றி உடைந்த நிலையில் காணப்பட்ட இவ் இறங்குதுறையூடாக பயணிகள் வந்து செல்வதில் பல இடையூறுகள் காணப்பட்டன.

மேலும், நோயாளர்களை படகுமார்க்கம் ஊடாக ஏற்றி இறக்குவதில் பல அசௌகரியங்கள் காணப்பட்டதுடன், ஆபத்து நிறைத்த இறங்குதுறையாகவும் காணப்பட்டது. 

குறித்த இறங்கு துறையினை திருத்தித்தருமாறு அப்பகுதி மக்கள் பல முறை பிரதேச செயலரிடம் கோரிக்கை விடுத்திருந்த போதும் நிதி வளங்கள் இல்லாத காரணத்தினால் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது மின்சார சபையின் புதிய திட்டத்தின் கீழ் மின் வழங்குவதற்கான புதிய செயன்முறைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஆரம்ப வேலைகளின் பொருட்டு கடற்படையினரின் உதவியுடன் தூண்கள் மற்றும் பாரிய இயந்திரங்கள் அப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

339 குடும்பங்கள் வாழும் இச்சிறிய தீவில் நாளாந்தம் 8 படகு சேவைகள் இடம்பெற்று வருகிறன. இங்குள்ள மக்களின் ஒரே போக்குவரத்து மார்க்கமாக படகு சேவையே காணப்படுகிறது.

எனவே, பொதுமக்களின் நன்மை கருதி இது தொடர்பில் ஊர்காவற்துறை பிரதேச செயலர் கவனம் எடுத்து நிரந்தரமாக புனரமைத்து தரவேண்டும் என எழுவை தீவு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X