2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஓய்வூதியத்துக்காக தனியார் துறையை உதாசீனம் செய்கின்றர்

Gavitha   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

அரசாங்க வேலைவாய்ப்புக்காக , கூடிய வருமானத்தைத் தரும் தனியார் நிறுவனங்களில் தரப்படும் வேலைகளை எமது இளைஞர், யுவதிகள் உதாசீனம் செய்கின்றார்கள். 40 அல்லது 50 வருடங்களின் பின்னர் கிடைக்கும் ஓய்வூதியத்துக்காக, வலியவரும் சீதேவியை உதாசீனம் செய்கின்றார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, வடமாகாண சபையின் ஏற்பாட்டில் சுற்றுலாத்துறையின் மாகாண கருத்தரங்கு, யாழ்;ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியில் திங்கட்கிழமை (28) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'ஓய்வூதியத்துக்கு இன்று பல திட்டங்கள் இருக்கின்றன. இன்று கூடிய வருவாயைப் பெறுபவர்கள், இவ்வாறான ஓய்வூதியத்திட்டத்துக்கு ஒரு தொகையை மாத தவணைக் கட்டணமாக செலுத்தி வந்தால், 50 வருடங்களுக்கு பிறகு ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது.

வேலையற்ற பட்டதாரிகள் சுற்றுலாத்துறையில் போதிய வேலைவாய்ப்புக்களைப் பெறலாம். சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டுமென்றால், இளைஞர், யுவதிகள சுற்றுலாச் சேவையில் ஈடுபட முன்வர வேண்டும்.

உணவகக் கல்லூரி ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதில் எமது இளைஞர், யுவதிகள் நன்மைகளை பெற்றுக்கொள்ளவேண்டும. உங்கள் பண்பாட்டுக்கு   பாதிப்பு ஏற்படாமல் நீங்கள் உங்கள் கடமைகளைச் செய்ய வல்லவர்கள் என்பது என்னுடைய கருத்து' என்று அவர் மேலும் கூறினார்.

இக்கருத்தரங்கில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், சுற்றுலாச் சபை அதிகாரிகள், வடமாகாண சுற்றுலாத்துறை தொடர்பான அமைப்புக்களின் பிரதிநிதிகள், சுற்றுலாத்துறை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வடமாகாணத்தின்; சுற்றுலாத்துறையை மேம்படுத்தி, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தலுடன், வடமாகாண வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .