2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’கச்சத்தீவு திருவிழாவுக்கு 9 ஆயிரம் பேர் பங்குகொள்வர்’

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இம்முறை நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழாவில் இலங்கை, இந்தியாவில் இருந்து சுமார் 9 ஆயிரம் பேர் பங்குகொள்வார்களென்று எதிர்பார்க்கப்படுவதாக, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், இன்று (07) நடைபெற்ற கச்சத்தீவு திருவிழா ஏற்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கச்சத்தீவு தேலயத்தின் வருடாந்த திருவிழா மார்ச் மாதம் 7ஆம் திகதியன்று நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த திருவிழவுக்குக் கடற்படையினரின் உதவி இன்றியமையாததாகுமெனத் தெரிவித்த அவர், இதற்கமைய, திருவிழாவுக்கு முதல் நாளான 6ஆம் திகதி அதிகாலை 5 மணியில் இருந்து மதியம் 11 மணி வரைக்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவான் வரை பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அன்று காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணி வரைக்கும் குறிகாட்டுவானில் இருந்து கச்சத்தீவு நோக்கிய படகு சேவையும் நடைபெறுமெனவும், அவர் தெரிவித்தார்.

கடந்த முறை போன்றே, இம்முறையும்  9 ஆயிரம் பேர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் இம்முறையும் கச்சத்தீவில் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,  வேதநாயகன் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X