2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’கூட்டமைப்பிலிருந்து ​வெளியேறியவர்கள் உள்நுழைவதே சிறப்பானது’

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.நிதர்ஷன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை குலைந்து, அதன் பலம் குறைவடையுமாயின், அதனால் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்து, கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அனைவரும், மீண்டும் கூட்டமைப்புக்குள் வர வேண்டும் என, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளின் பிளவுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கூட்டமைப்புக்குள் இருந்து, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய இருவர் மட்டுமல்லாது, டெலோ அமைப்பின் முன்னாள் செயலாளர் சிறிகாந்தா என பலரும் வெளியேறியுள்ளனர் என்றும் இது நிச்சயமாக, நாடாளுமன்றத் தேர்தலின் போது, கூட்டமைப்புக் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

அப்படி ஒரு தாக்கம் நடந்துவிடக்கூடாது என்று தெரிவித்த அவர், முக்கியமாக, கடும்போக்காக உள்ள அரசாங்கத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமை சீர்குலையுமாக இருந்தால், அது அரசாங்கத்துக்கு இன்னும் வசதியாக இருக்கும் என்றும் எனவேதான் ஒற்றுமைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், கூட்டமைப்பில் இருந்து விலகியவர்கள் அனைவரும், இரண்டு மாதத்துக்குள் மீண்டும் கூட்டமைப்புக்குள் வருவதென்பது, சாத்தியக்குறைவாகவே உள்ளது என்றும் ஏனெனில், அந்த அளவுக்கு பிரிவுகள் வந்துவிட்டன என்றும் என்றாலும் முயற்சிகள் எடுக்கப்படல் வேண்டும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .