2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’கிடைத்துள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்’

Editorial   / 2017 மே 29 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“கடந்த காலத்தில் காணப்பட்ட அடக்குமுறை ஆட்சியானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு,  நல்லாட்சி அரசாங்கத்தால் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி, பெண்கள் தமது பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும்” என, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் நேற்று இடம்பெற்ற பெண்கள் வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்கில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் நிறைவடைந்தும் அதன் வடுவில் இருந்து மீள முடியாமல் இருக்கின்றோம். கடந்த அடக்குமுறை ஆட்சிக் காலத்தில் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டது. கொலை,கொள்ளை, கப்பம் என நாடு சீரழிந்திருந்தது

பிரதேச சபைகள் கூட ஆயுதக்குழுக்களின் கட்டுபாட்டிலேயே காணப்பட்டிருந்தன. தற்போது
அந்நிலமையானது மாற்றப்பட்டுள்ளது.

பல பெண்கள் திறமைகள் இருந்தும் அதனை வெளியே கொண்டுவர முடியாமல் உள்ளார்கள். பெண்களது பிரதிநித்துவத்தை அதிகரிப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன. பெண்களது பிரதித்துவமானது கட்சியிலேயே புறக்கணிக்கப்படுகின்றது.  பெண்களுக்கு நிதிப் பிரச்சனை உள்ளது. பக்க பலம் குறாவாகவுள்ளது.

மாவட்டத்துக்கு 25 சதவீதம் பெண்கள் என்ற கோட்டா முறையை கொண்டுவந்து அதனை நாடாளுமன்றித்தில் பிரதமர் நிறைவேற்றியுள்ளார். அதனை பயன்படுத்தி பெண்கள் தமது பிரதிநித்துவத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .