2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கேரளக் கஞ்சா எரித்து அழிப்பு

Editorial   / 2019 நவம்பர் 23 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், என். ராஜ்

சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால், யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையாகவுள்ள வெற்றுக் காணியில் இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு எரித்து அழிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில், அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த ஒரு வருடத்துக்குள் இடம்பெற்று முடிந்த  கஞ்சா போதைப்பொருள் குற்றத்துகான 20 வழக்குகளின் சான்றுப்பொருள்களை எரித்து அழிக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் அவற்றை எரித்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேல் நீதிமன்ற பதிவாளர் மீரா வடிவேற்கரசன் முன்னெடுத்தார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையில் உள்ள வெற்றுக் காணியில் சுமார் ஆயிரம் கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகளும் உடைத்து குவிக்கப்பட்டன.

மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் அவை தீயிட்டு அழிக்கப்பபட்டது.

இதேவேளை, கடந்த மூன்று வருடங்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2 ஆயிரத்து 500 கிலோக் கிராமுக்கு அதிகமான கஞ்சா எரித்து அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .