2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கிளிநொச்சி கல்வி வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை

Gavitha   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழுள்ள பாடசாலைகளில், அதிலும்,  குறிப்பாக கிராமப்புறப் பாடசாலைகளில் முக்கிய பாடங்களுக்கு 88 ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக ,  கிளிநொச்சி கல்வி வலய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி கல்வி வலயத்தில் தற்போது 104 பாடசாலைகளில் 32 ஆயிரத்து 112 மாணவர்கள் கல்விகற்றுவருவதுடன், 1,694 ஆசிரியர்கள், கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களுக்கான ஆசிரியர் வீதமானது 19:01 என்று காணப்படுகின்றது.

இருந்தும், ஆங்கில பாடத்துக்கு 15 ஆசிரியர்களும், விஞ்ஞான பாடத்துக்கு 51 ஆசிரியர்களும், கணித பாடத்துக்கு 22 ஆசிரியர்களும் பற்றாக்குறையாகவுள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறை பின்தங்கிய கிராமப்புறப் பாடசாலைகளிலேயே அதிகமுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் கிராமப்புற மாணவர்கள், மேலதிக வகுப்புக்களுக்கு செல்வதற்கான வசதிகள் இன்மையாலும், உரிய கல்வி அடைவு மட்டத்தை எட்ட முடியாமலும் பாடசாலையை விட்டு இடைவிலகும் நிலை உருவாகியுள்ளதாக ஆசிரியர் பற்றாக்குறையான பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .