2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சகல மாகாண ஆளுநர்களின்அதிகாரங்களை குறை’

Gavitha   / 2016 டிசெம்பர் 18 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாணங்களுக்கான ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருப்பதையிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வடமாகாண சபையோ, எவ்விதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அந்த அதிகாரமானது, ஜனாதிபதியிடம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.  

இந்த யோசனை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில்,  

“ஆளுநர் என்ற வசனத்தின் மூலமாக, மிதமிஞ்சிய அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதி என்பதனால், விசாலமான அதிகாரங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதனால், மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய மக்கள் பிரதிநிதிகள், ஆளுநரின் பரிந்துரைகள் இன்றி, எதனையும் செய்யமுடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது.

ஆகையினால்தான், சகல மாகாண ஆளுநர்களின் அதிகாரங்களையும் குறைக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  

“ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், மிதிமிஞ்சியவையாகும். அதனால்தான், வடமாகாண முதலமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து செலவளிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த பல்வேறானா அபிவிருத்திச் செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.  

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “இவ்வாறான நிலைமையே, நாட்டில் உள்ள ஏனைய மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆளுநர்களின் அதிகாரங்களை முழுமையாக இல்லாமற் செய்வதே காலத்தின் தேவையாகும்.

“என்றாலும், சகல மாகாண சபைகளின் அளுநர்களின் அதிகாரங்களையும் குறைக்க வேண்டும் என்றே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது யோசனையை முன்வைத்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .