2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சிங்கள - தமிழ் சமூகங்களை ஒன்றிணைக்கும் சவாலில் கோட்டாபய வெல்வார்’

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன், எம்.றொசாந்த், செல்வநாயகம் ரவிசாந்

துருவமயப்பட்டுள்ள   சிங்கள - தமிழ் சமூகங்களையும் மிகத் துரிதமாக ஒன்றிணைக்கும் சவாலுக்குத் தாங்கள் முகங்கொடுக்கின்றீர்களெனத் தெரிவித்துள்ள வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், இந்தத் தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் தாங்கள் வெற்றியடைவீர்களென நம்புவதாகவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு, அவர், இன்று (19) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், முன்னைய தேர்தல்களையும் பார்க்க, இந்தத் தேர்தலில் தமிழர்களும் சிங்களவர்களும் துருவமயப்பட்டுள்ளமை பற்றி கவலையடைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிக அவசியமான பல்வேறு விடயங்கள் உள்ள போதும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்தவக் குடும்பங்கள் சுய ஆதரவில் வாழ்வதற்கான புனர்வாழ்வுத்திட்டமொன்றை  உடன் வகுத்து அமுல் செய்யுமாறு தங்களிடம் வேண்டிக் கொள்வதாகவும், அவர் கூறியுள்ளார்.

மேலும், மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .