2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தும் பணி: யாழிலும் மன்னாரிலும் முன்னெடுப்பு

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.றொசேரியன் லெம்பேட், செந்தூரன் பிரதீபன், எஸ்நிதர்ஷன், செல்வநாயகம் ரவிசாந்

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அறிவுறுத்தலுக்கமைய, பொலிஸ் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தும் பணி, யாழ்ப்பாணம், மன்னளார் ஆகிய பகுதிகளில், இன்று (26) முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய, யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தப்படும் சிறப்பு செயற்றிட்டம், யாழ்ப்பாணம் - முனியப்பர் கோவில் முன்றலில், காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையமும் பிரதேச செயலகமும் இணைந்து, யாழ்ப்பாணம் மாநகரில் இந்தச் செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளன.

குறித்த செயற்றிட்டத்தால், தபாலக சந்தி முதல் தந்தை செல்வா சதுக்கம் வரையிலான காங்கேசன்துறை வீதி, காலை 7 மணி முதல் 8.30 மணி வரை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மன்னார் நகர சுற்று வட்ட பகுதிகளில், சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், வடிகான்களும் சுத்தம் செய்யப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .