2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சேதமடைந்துள்ள நந்திக்கடல் பாலம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 18 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை வெள்ளத்தினால் வட்டுவாகல், நந்திக்கடல் பாலம் சேதமடைந்துள்ளது. நீர்வரத்து கூடுதலாக பாய்ந்து கொண்டிருப்பதால் சேதமடைதல் இன்னும் அதிகரிக்கலாம் என நேரில் சென்று பார்வையிட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் அவதானத்துக்கு பொதுமக்கள் கொண்டு வந்துள்ளனர். 

இது தொடர்பில் ரவிகரன் கருத்து தெரிவிக்கையில், 

இப்பாலம், முன்னோர்களின் கருத்துக்களின்படி 1950ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் பழமை வாய்;ந்ததாக இருப்பதுடன், இறுதிப்போர்க் காலப்பகுதியிலும் பலத்த சேதங்களை சந்தித்தது. சிறிய சிறிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் பழமையான இப்பாலம் ஆறுபாயும் காலத்தில் தாக்குப்பிடிக்க முடியாத நிலையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

முல்லைத்தீவு நகரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் போக்குவரத்துகள் மிக அதிகமானவை இப்பாலத்தினூடாகவே நடைபெறுகின்றன. பல நூற்றுக்கணக்கான மக்கள் நாளாந்தம் பயணிக்கின்றார்கள். 

மக்களின் பயன்பாட்டில் மிகத் தேவையாகக் காணப்படும் இப்பாலத்தை மீள்சீரமைக்க வேண்டியது முக்கிய கடமை. அகலமான பாதையுடன் அமைக்கக் கூடிய வகையில் இப்பாலம் மீள் உருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே மக்களின் கருத்து. 

இப்பாலம் அமைக்கப்படவேண்டிய  தேவையை பல தரப்பினருக்கும் மக்கள் மற்றும் பொது அமைப்புகள் எடுத்துக்கூறியும் இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை. எம்மால் நிச்சயமாக வடமாகாணசபையின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்படும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .