2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சிவில் நடவடிக்கைகளில் முப்படையும் தலையிடக்கூடாது

Princiya Dixci   / 2016 ஜூலை 12 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

சிவில் நடவடிக்கைகள் மற்றும் கூட்டங்களில் முப்படைகளும் தலையிடக்கூடாது என்ற தீர்மானம் வடமாகாண சபையின் இன்று செவ்வாய்க்கிழமை (12) நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் து.ரவிகரன் இந்த பிரேரணையைக் கொண்டு வந்தார்.

முல்லைத்தீவில் ஒரு கூட்டத்துக்குச் சென்ற கடற்படை அதிகாரிகள், இங்கு தமிழர்களின் கரைவலைப்பாடுகள் இல்லை. அனைத்தும் சிங்கள மக்களுடைய கரைவலைப்பாடுகள் என்று பொய்யான கருத்துக்களைக் கூறியுள்ளார். இதனால் சிவில் நடவடிக்கையில் இராணுவம் தலையிடக்கூடாது என ரவிகரன் கூறினார்.

இராணுவம் மட்டுமல்ல முப்படைகளும் தலையிடக்கூடாது என இதனை மாற்ற வேண்டும் எனக்கூறிய உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன், வடக்கில் நடப்பது நல்லாட்சியா? இராணுவ ஆட்சியா? என்பது தெரியவில்லை என்றார்.

முப்படைகளும் சிவில் நடவடிக்கைகள் மற்றும் சிவில் கூட்டங்களிலும் தலையிடக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா கூறினார்.

அனைத்தத் திருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிரேரணை நிறைவேற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .