2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தெல்லிப்பழை வைத்தியசாலை தொண்டர் ஊழியர்களின் வெற்றிடம் விரைவில் நிரப்பப்படும்

Gavitha   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய தொண்டர் ஊழியர்களின் ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் ஏற்பட்ட ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு போதுமானளவு நிரந்தர ஊழியர்கள் இருப்பதாகவும் விரைவில் அவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.திருவாகரன் தெரிவித்தார்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய வந்த 35 தற்காலிக ஊழியர்களின் ஒப்பந்தகாலம், புதன்கிழமை (30) முடிவடைவதையடுத்து, வைத்தியசாலையில் ஊழியர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்த ஊழியர்கள், அரச சார்பற்ற நிறுவனம் மற்றும் தெல்லிப்பழை கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் நிதியுதவியில் மாதாந்தம் 6,000 ரூபாய் சம்பளத்தில் கடந்த 2 வருடங்களாக கடமையாற்றி வந்தனர். இந்நிலையில், ஊழியர்களின் ஒப்பந்த காலம் முடிவடைகின்றமையால், இந்த ஊழியர்களை தொடர்ந்து பணியில் ஈடுபடுத்த அல்லது வேறு ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என சுகாதார அமைச்சின் செயலாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, அவர் இதனைக் கூறினார்.

'தேவையான நிரந்தர தொண்டர் ஊழியர்கள் வடமாகாணத்தில் காணப்படுகின்றனர். வௌ;வேறு வைத்தியசாலைகளில் அவர்கள் கடமையாற்றி வருகின்றனர். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள ஊழியர் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு, அந்தந்த வைத்தியசாலையில் மேலதிகமாகவுள்ள நிரந்தர தொண்டர் ஊழியர்களை விடுவிக்குமாறு, வைத்தியசாலைகளுக்கு பொறுப்பான சுகாதார வைத்தியதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களை வைத்தியசாலைகள் விடுவித்தவுடன், அவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு பணிக்கு அமர்த்தப்படுவார்கள்' என அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .