2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’நாட்டுக்காக ஒன்றிணைவோம்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டம், யாழ்ப்பாணத்தில், முத்தவெலி நகர சபை மைதானத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்துக்கான ஜனாதிபதியின் விஜயத்தின் போது, வடமாகாண மக்களுக்கு மேலும் பல நன்மைகளை வழங்கும் நிகழ்வுகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் ஒருங்கிணைப்பின் ஊடாக கடற்படையினரால் கண்ணகி அம்மன் கோவிலில் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை மக்களிடம் கையளித்தல், கிளிநொச்சி வலய கல்வி அலுவலகத்தை டிஜிட்டல் தொழிநுட்பத்தினூடாக திறந்து வைக்கும் நிகழ்வும்  ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டது.

இளைஞர்களின் எதிர்காலத்துக்குவழிவகுக்கும் ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிறுவன வலையமைப்பை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ் மாவட்ட தொழில் வழிகாட்டல் நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால்  திறந்து வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இளைஞர், யுவதிகளுடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அங்கு வருகை தந்திருந்த 07 பட்டதாரிகளுக்கு அடுத்த வாரமளவில் புதிய தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

பேண்தகு கூட்டுறவு வங்கி நடைமுறையின் கீழ் வட மாகாண பொதுமக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக கைத்தடி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கி தலைமை அலுவலகத்தை  முற்பகல் ஜனாதிபதி  திறந்து வைத்தார்.

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அமைச்சர்களான அப்துல் ஹலீம், விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், காதர் மஸ்தான், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் மாகாண மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், யாழ் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .