2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நம்பகத்தன்மையான விசாரணை மேற்கொள்ளப்படும்

Sudharshini   / 2016 ஜூலை 19 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட தமிழ் - சிங்கள மாணவ குழுக்களுக்கிடையில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவத்தை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவில் சிங்கள அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் நம்பகத்தனமையான ஒரு நடுநிலையான விசாரணை இடம்பெறும் என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

'மேற்படி மோதல் சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். இதனை விசாரணை செய்வதற்கு மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் யாழ் மாவட்டத்தில் கடமையிலுள்ள பெருன்பான்மையினத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் சிங்களம் எழுதவோ வாசிக்கவோ முழுமையான பரீட்சயம் உடையவர்கள். எனவே, இந்த விசாரணை நேர்த்தியாக இடம்பெறும்.

இந்த குழுவின் விசாரணை அறிக்கையின் மூலம், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த முடியும்.

பிரச்சினை ஆரம்பித்த இடத்தின் நிலைமைகள் சுமுகமானாலும் பரவிய விதமும் விடயங்களுமே தற்போது பிரச்சினையாக உள்ளன.

மாணவர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் தமது கல்வியினை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மாணவர்கள் எவரும் அச்சங்கொள்ளத் தேவையில்லை' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .