2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நெடுந்தீவு மக்களுக்கும் மீன்கள் கொடுங்கள்

Niroshini   / 2016 மார்ச் 04 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

நெடுந்தீவில் பிடிக்கும் மீன்கள் முழுவதும் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் கொண்டு செல்லப்படுவதால் நெடுந்தீவில் வசிக்கும் மக்கள் தங்களுக்குத் தேவையான மீனை நுகரமுடியாமல் இருக்கின்றது என நெடுந்தீவு மக்கள் விசனம் தெரிவித்தனர்.

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் அபிவிருத்திக் குழுக்கூட்டம் வியாழக்கிழமை (03) பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போதே மக்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

மீன்களை கொள்முதல் செய்யும் முகவர்கள் நெடுந்தீவுக்கு வருகை தந்து, நெடுந்தீவில் பிடிக்கப்படும் மீன்களை முழுமையாக மீனவர்களிடம் கொள்முதல் செய்து யாழ்ப்பாணம், கொழும்புக்கு கொண்டு செல்கின்றனர். இதனால், இங்குள்ள மக்கள் நல்ல மீன்களை நுகரமுடியாமல் இருக்கின்றது.

இங்குள்ள குழந்தைகளில், 400 குழந்தைகள் போசாக்கு குன்றியவர்களாக இருப்பதற்கு நல்ல, சத்துள்ள மீன்கள் நுகர முடியாமல் இருப்பதும் ஒரு காரணமாகவுள்ளது.

இது தொடர்பில் இங்குள்ள 4 கடற்றொழிலாளர்கள் சங்கங்களும் உணர்ந்து, தாங்கள் பிடிக்கும் மீன்களில் 25 கிலோகிராம் மீன்களையாவது, நெடுந்தீவில் வியாபாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .