2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நுளம்பு வலையில் நன்னீர் மீன்பிடி

Gavitha   / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் குளங்களிலிருந்து வான்வெள்ளம் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில்,  குளங்களிலிருந்து வான்வழியாக வெளியேறும் நீரில் மீன்களை நுளம்பு வலைகளை பயன்படுத்தி பிடிப்பதில் மக்கள் ஆர்வங்காட்டி வருகின்றனர்.

கடந்த காலங்களில் வடமாகாண அமைச்சினாலும் மத்திய அமைச்சினாலும் மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டுள்ள நிலையில்,  பெருக்கமடைந்துள்ள மீன்கள் தற்போது வான்வெள்ளத்துடன் வெளியேறும் நிலையில் அம்மீன்களை நுளம்புவலைகள் கொண்டு பிடிப்பதில் கிராமமக்கள் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் நன்னீர் மீன் மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கின்றது.

முல்லைத்தீவில் 19 நீர்ப்பாசனக்குளங்களிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 9 நீர்ப்பாசனக்குளங்களிலும் வான்வெள்ளம் வழியாக பெருமளவு மீன்கள் கடலைச் சென்றடைந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .