2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'பால் உற்பத்தியாளர்களை ஊக்குவியுங்கள்'

George   / 2016 மே 30 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். குடாநாட்டில் பால் உற்பத்தியானது மிகவும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், அதனை அபிவிருத்தி செய்து ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கிராமியப் பொருளாதார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், 'நாட்டில் பால் உற்பத்தியில் தன்னிறைவு காணும் நோக்கில் 90,000 பால் உற்பத்தியாளர்களை உருவாக்க கிராமியப் பொருளாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த நிலையில், யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக பால் உற்பத்தியானது பாரிய வீழ்ச்சி நிலையை அடைந்துள்ளது. எனவே, இத்துறையைக் கட்டியெழுப்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என்றார். 

குடாநாட்டில் பால் உற்பத்தி தொடர்பில் உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கப்படுவதுடன், அவர்களுக்கான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். அத்துடன், சிறந்த முறையில் மேய்ச்சல் தரைகளை ஏற்படுத்தி அவற்றைப் பராமரிக்கக்கூடிய வழிவகைகளையும் மேற்கொள்ள வேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X