2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2016 ஜூலை 13 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

கோப்பாய் பகுதியில் அமைந்துள்ள 15ஆவது தேசியப்படையணியின் ஏற்பாட்டில், கோப்பாய் கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஜந்து பாடசாலைகளைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான பூரண அனுசரனையினை பிரிட்டிஸ் கல்லூரி வழங்கியிருந்தது. இந்த உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (12) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

15ஆவது தேசியப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ரோஹித விதானகேவின் ஏற்பாட்டில், நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம், கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி, நீர்வேலி அத்தியார் கல்லூரி, நீர்வேலி றோமன் கத்தோலிக்க பாடசாலை, மற்றும் கோப்பாய் சரவணபவானந்த கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்களுக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .