2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மீள்குடியேறிய விவசாயிகளுக்கு மறுவயற்பயிர் விதைகள் விநியோகம்

Gavitha   / 2015 நவம்பர் 25 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மாவட்டத்தில் வளலாய், வசாவிளான், தெல்லிப்பளை பிரதேசங்களில் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு, வடமாகாண விவசாய அமைச்சால் மறுவயற்பயிர் விதைகள் திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையத்தில்,  திங்கட்கிழமை (23) விநியோகிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேறிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் மறுவயற்பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்குடனும் நிலக்கடலை, பயறு, உழுந்து ஆகிய மறுவயற்பயிர் விதைகளை விநியோகிக்கும் இந்நிகழ்ச்சி, பிரதி விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாதசுந்தரம் தலைமையில் நடைபெற்றதுடன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மறுவயற்பயிர் விதைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

மீள்குடியேறிய விவசாயிகளில் தெரிவு செய்யபட்ட 123 பயனாளிகளில் ஒவ்வொருவருக்கும் 3 கிலோகிராம் நிலக்கடலை, 2 கிலோகிராம் பயறு, 2 கிலோகிராம் உழுந்து வழங்கப்பட்டுள்ளன. ஒரு ஏக்கர் செய்கைக்குப் போதுமான இவ்விதைகளோடு,  மண்வெட்டி, கத்தி போன்ற விவசாய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்பட்ட விதைகள் மற்றும் உபகரணங்களின் பெறுமதி 2,600 ரூபாய் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு மறுவயற்பயிர் விதைகள் வடக்கு விவசாய அமைச்சால் விநியோகிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X