2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘வடக்கு, கிழக்கில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்க, ஐ.நா தலையிடுமாறு வலியுறுத்தி, வடக்கு - கிழக்கு ஆகிய மாகாணங்களில் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் - நல்லூரில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில், இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஐ.நா மனித உரிமைப் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட வேண்டுமென, நீதி அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளதாகவும் உங்கள் அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இருந்தால், இதனை இங்கு கூறாது, நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத் தொடரில் வைத்து கூறுங்களெனவும் கூறினார். 

எனவே, இந்த அரசாங்கத்துக்கு “தில்” இருந்தால், ஐ.நா உறுப்பு நாடுகளில் இருந்து விலகிக் காட்டட்டும் பார்க்கலாமென சவால் விடுத்த எம்.கே.சிவாஜிலிங்கம், திமிர்க் கதைகளைக் கூறி, நாட்டுக்குள் பிரச்சினைகளை அதிகரிக்கும் வேலைகளையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் சாடினார். 

இதேவேளை, புதிய ஜனாதிபதி தமிழ் மக்களுக்கான இடைக்காலத் தீர்வைக் கூட வழங்கத் தயாராக இல்லையெனத் தெரிவித்த அவர், எனவே, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமெனவும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .