2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வீட்டு உரிமையாளரின் செயற்பாட்டால் மக்கள் அசெளகரியம்

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட புங்கன்குளம் பகுதியில், (புறூடி வீதிக்கு முன்னால் அமையப் பெற்றுள்ள ஒழுங்கை) வசிக்கும் நபரொருவர் தனது வீட்டுக் கழிவு நீரைப் பொதுமக்கள் போக்குவரத்துக்கு அன்றாடம் பயன்படுத்திவரும் வீதிக்கு விட்டமையால் குறித்த வீதியூடாகப் போக்குவரத்து செய்து வரும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

மேலும் குறித்த வீதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால் டெங்கு அபாய அறிகுறிகள் காணப்படுவதுடன், வீதியும் பயன்படுத்த முடியாதுள்ளதாக, குறித்த பகுதி பொது மக்களால் மாநகரசபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டுக்கமைய, மாநகர சுகாதாரப் பிரிவால் குறித்த வீட்டு உரிமையாளருக்கு பல தடவைகள் அறிவுறுத்தப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், குறித்த விடயம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (19) யாழ். மாநகர மேயரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. குறித்த விடயத்தை அறிந்த மேயர் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று விடயங்களை ஆராய்ந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் வீட்டு உரிமையாளருக்கு மாநகர சட்ட விதிமுறைகள் குறித்து முதல்வரால் விளக்கப்பட்டதுடன், உரிய முறையில் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X