2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்

Editorial   / 2020 மார்ச் 15 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

பொலிஸ் நிலையத்தில் தடுப்பில் வைத்து சித்திரவதைக்குட்படுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த சந்தேக நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் காவலில் இருந்து தப்பித்துள்ளார்.

அரியாலை - மாம்பழம் சந்தியைச் சேர்ந்த விக்டர் சுந்தர் (வயது-46) என்ற சந்தேக நபரே, வௌ்ளிக்கி​ழமை மாலை 4.30 மணியளவில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிகிச்சைப் பிரிவிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவினரால் புதன்கிழமை முற்பகல் கைது செய்யப்பட்ட அவர், அன்றைய தினம் மாலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் இணைப்பாளரால் பொலிஸ் நிலைய தடுப்பிலிருந்து அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

நபர் ஒருவரைத் தாக்கியமை மற்றும் ஹேரோய்னை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில், பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் காவலில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், அவர், வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் காவலிலிருந்து தப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .