2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரட்சி நிலமை தொடர்பாக ஆராய்தல்

Editorial   / 2017 ஜூலை 21 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான குழுவினர்,  யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, வடமாகாணத்தின் வரட்சி நிலமை தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

இதன்போது, யாழ்.மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

குறிப்பாக குடிநீருக்கான தட்டுப்பாடு, விவசாயத்தின் பாதிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், வரட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவசர உதவிகளை வழங்குவது தொடர்பிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், ஆ.பரம்சோதி மற்றும் கடற்படை பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள், ஆளுநரின் செயலாளர,; திணைக்கள தலைவர்கள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பு தொடர்பாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கையில்,

'வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக, மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை தொடர முடியாதுள்ளதுடன்,  உற்பத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியவில்லை. குறிப்பாக தீவப்பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவதையும் எடுத்துக்கூறியுள்ளோம்.

இதற்காக குடிநீரைக் கொண்டு செல்வதற்கு வசதியாக பாரிய கொள்கலன்கள், தண்ணீர்த்தாங்கிகள் தேவை என  வேண்டுகோள் விடுத்துள்ளோம். இதற்கு உதவிகள் செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் நீண்டகால திட்டங்களாக, மழை நீரைச் சேகரித்தல், நீர் நிலைகளை தூர்வாரிப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்;டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கையை முன்வைத்தோம். வரட்சி என்பது உடனடியாக தீர்க்கப்பட முடியாத ஒன்று. நீண்டகால திட்டங்களைக் கொண்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருப்பதனால், பாதிக்கப்பட்டவர்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு நட்டஈடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

அதனை அவர் ஏற்றுக்கொண்டார். மேலும் ஜனாதிபதி பிரதமரிடமும் இது தொடர்பாக கலந்துரையாடுவதாகவும் நீங்களும் கலந்துரையாடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்' என்று மாவை  சேனாதிராஜா எம்.பி மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .