2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விண்ணப்பம் கோரல்

Gavitha   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் 2016ஆம் ஆண்டுக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எந்திரவியல் தொழில்நுட்பவியலாளர் கற்கைநெறிகள் என்னும் வகைக்குள், படவரைவியலுக்கான தேசிய சான்றிதழ், குடிசார் எந்திரவியல், மின்னியல் மற்றும் இலத்திரனியல் எந்திரவியல், கனிய அளவையியல், பொறிமுறை எந்திரவியல் (ஓடோ மொபைல்) ஆகிய கற்கை நெறிகள் உள்ளன.

வர்த்தகத்துறை கற்கை நெறிகள் என்னும் வகைக்குள் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா, சுருக்கெழுத்து தட்டெழுந்து மற்றும் கணினி,   செயலாளரியல் பயிற்சியில், கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர், சந்தைப்படுத்தலில் தேசிய சான்றிதழ், விற்பனை பிரதிநிதியாளர் ஆகிய கற்கை நெறிகள் உள்ளன.

விசேட கற்கைநெறிகள் என்னும் வகைக்குள், நிர்மாண தள மேற்பார்வையாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், வரவேற்பாளர் பயிற்சி ஆகிய கற்கை நெறிகள் உள்ளடங்குகின்றன.

கைப்பணியாளர் கற்கைநெறிகள் என்னும் வகைக்குள், பல்திறன் கைப்பணியாளர் நிர்மாணிப்பு, நீர்க்குழாய் பொருத்துநர், பொறியீட்டுச் சான்றிதழ், மோட்;டார் சைக்கிள், ஸ்கூட்டர், இலத்திரனியல், கைத்தொழில்துறை மின்னியலாளர், மோட்டார் வாகன திருத்துநர், மின்னியல் முறை பயிற்சியில் தேசிய சான்றிதழ், அலுமினிய பொருள் உருவமைத்தல், வீட்டுப்பாவனை மின் உபகரணங்கள் திருத்துதல், கணிய அளவை உதவியாளர், மேசன் கைப்பணியாளர் ஆகிய கற்கைகள் இருக்கின்றன.

பொதுக் கற்கைநெறிகள் என்னும் வகைக்குள் ஆங்கிலக் கல்வியில் தேசிய சான்றிதழ், கணிணி வன்பொருளுக்கான சான்றிதழ் ஆகிய கற்கைகள் அடங்குகின்றன.

முழுநேரம் மற்றும் பகுதி நேரம் என கற்கை நெறியை மாணவர்கள் தொடரமுடிவதுடன், முழு நேரக் கற்கைகள் தொடரும் மாணவர்களுக்கு மாதாந்தம் 1,000 கொடுப்பனவும் சலுகை அடிப்படையிலான பிரயாண பருவச் சீட்டும் வழங்கப்படுகின்றது.

ஆகக்கூடுதலாக 3 வருடங்கள் கற்கையை தொடர்வதன் மூலம், தேசிய தொழில் தகைமைச்சான்றிதழ் - 5ஐ (என்.வி.கியூ) யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்ப முடிவுத்திகதி இம்மாதம் 30ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விவரங்களைப் பெறுவதற்கு யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் 2016ஆம் ஆண்டுக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன http://www.dtet.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .