2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விலை கிடைக்காமல் உருளைக்கிழங்கு செய்கையாளர்கள் அவதி

Niroshini   / 2016 மார்ச் 03 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.மாவட்டத்தில் உருளைக்கிழங்கு செய்கையில் ஈடுபட்டவர்கள் தங்கள் கிழங்குகளுக்கு சந்தை வாய்ப்பும், உரிய விலையும் கிடைக்காமையால் பெரும் நஸ்டத்துக்குள்ளாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் செய்கை பண்ணப்பட்ட உருளைக் கிழங்குகள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

நுவரொலியா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு யாழ்ப்பாணச் சந்தைகளில் 60 ரூபாய் தொடக்கம் 80 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. நுகர்வோரும், அந்த உருளைக்கிழங்குகளையே நாடுவதால், யாழ். உருளைக்கிழங்குகளுக்கான கேள்வி குறைவாகக் காணப்படுகின்றது.

தம்புள்ளையில் யாழ். உருளைக் கிழங்கு 40 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் தாங்கள் செய்கையில் நட்டமடைவதாகவும், எதிர்காலத்தில் உருளைக்கிழங்கு செய்கையை செய்வதா? என்பது தொடர்பில் யோசிக்க வேண்டியுள்ளது என உருளைக்கிழங்கு செய்கையாளர்கள் தெரிவித்தனர்.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகளை விட யாழ். உருளைக்கிழங்குகள் சற்று இறுக்கத்தன்மையாக காணப்படுவதால் பலர் அதனை கொள்முதல் செய்வதை தவிர்க்கின்றனர்.

கடந்த காலங்களில் செய்கை பண்ணப்பட்ட உருளைக்கிழங்கு வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் சதோச நிறுவனம் விவசாயிகளிடமிருந்து நியாய விலையில் கொள்முதல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X