2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழில் கடந்த ஒருவாரத்தில் 10 கொள்ளைச் சம்பவங்கள்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 04 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத், சுமித்தி)

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரகாலத்தில் 10 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இக்கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் பொலிஸார் விசாரஇணையை மேற்கொண்டுவருவதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணம், கொடிகாமம், நெல்லியடி, ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை, மானிப்பாய் ஆகிய பகுதிகளிலேயே இக்கொள்கைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இக்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நாவல் வீதியில் கடையொன்று உடைக்கப்பட்டு 24 ஆயிரத்து 300 பெறுமதியான உபகரணங்கள், கஸ்தூரியார் வீதியிலுள்ள வீடொன்றில் 6 இலட்சத்து 20 பெறுமதியான நகைகள், முனிஸ்வரன் வீதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் பெறுமதியான 2 பவுண் சங்கிலி, கொடிகாமம் பகுதியில் கடை உடைக்கப்பட்டு 6 லட்சத்து 26 ஆயிரம் பெறுமதியான உபகரணங்கள், மானிப்பாய் வீதியில் கடை உடைக்கப்பட்டு 10 லட்சத்து 20 ஆயிரம் பெறுமதியான உபகரணங்கள், சங்கானை பகுதியில் 8 ஆயிரம் பெறுமதியான துவிச்சக்கர வண்டி, காரைநகர் பகுதியில் வீடு உடைத்து 2 இலட்சத்து 25 ஆயிரம் பெறுமதியான நகைகள் மற்றும் வீட்டு உபகரணங்கள், சண்முகநாதன் பாடசாலையில் 83 ஆயிரத்து 650 பெறுமதியான கணினி, அளவெட்டி பகுதியில் கோவில் உடைத்து 28 பெறுமதியான வெள்ளி விளக்குகள், பண்டத்தரிப்பு பகுதியில் 23 ஆயிரம் ரூபா பெறுமதியான தொலைக்காட்சி  26 லட்சத்தி 85 ஆயிரத்து 136 பெறுமதியான நகைகள் மற்றும் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .