2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொற்பதி வீதி புனரமைப்புக்கு ரூ.11 மில்லியன் ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடத்தனை - பொற்பதி வீதியை புனரமைப்பதற்கு 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புனரமைப்பு பணிகள் 2015 ஜனவரி மாதம் தொடக்கம் ஆரம்பமாகும் எனவும் பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் பூபாலசிங்கம் சஞ்ஜீவன் திங்கட்கிழமை (27) தெரிவித்தார்.

3.7 கிலோமீற்றர் நீளமான மேற்படி வீதியானது பாரியளவில் சேதமடைந்து போக்குவரத்தில் ஈடுபடமுடியாத அளவிற்கு உள்ளது. 3 கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 500இற்கும் மேற்பட்ட மக்களின் பிரதான வீதியாக இவ்வீதி காணப்படுகின்றது.

வீதி சேதமடைந்திருப்பதால் பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் உள்ளிடட பலர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளமையால் மேற்படி வீதி மேலும் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், பருத்தித்துறை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதியாக இந்த வீதி காணப்படுகின்றமையால், இந்த வீதி புனரமைப்பு குறித்த தவிசாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி வீதியை புனரமைத்து தரும்படி மேற்படி பகுதியில் வசிக்கும் மக்கள் எங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கமைய வீதியை புனரமைப்பதற்கு 11 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கி வைத்துள்ளோம் மழை காலம் முடிவடைந்ததும், எதிர்வரும் ஜனவரி மாதம் புனரமைப்பு பணிகளை முன்னெடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • sella Monday, 27 October 2014 04:45 PM

    பருத்தித்துறை பிரதேச சபையால் நீண்டகாலமாக ஏமாற்றம் செய்யப்பட்ட நிலையில் கடந்த மாதத்துக்கு முன்பு பொற்பதி மற்றும் குடத்தனை மக்களால் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது இவ் வீதி புனரமைப்பு தொடர்பாக அதன் பெறுபேறுதான் சஞ்சீவன் அவர்களின் அறிவிப்பு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .