2024 மார்ச் 28, வியாழக்கிழமை

15ஆவது ஆளுநர் மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி யாழில்

A.P.Mathan   / 2012 நவம்பர் 09 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


15ஆவது ஆளுநர் மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாநாடு தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் முதல்முதலாக ஆளுநர் மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கையில் உள்ள 9 மாகாணங்களின் ஆளுநர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் 16ஆம் திகதி வடமாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களுக்கு அவர்கள் விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக நல்லூர்,, நயினாதீவு மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு அளுநர்கள் விஜயம் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த ஆளுநர் மாநாட்டை முன்னிட்டு விசேட கண்காட்சி 14ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளதாகவும் இக்கண்காட்சியில் வடமாகாண சபையில் உள்ள அனைத்து அமைச்சுக்களும் பங்குபற்றுவதுடன் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக இந்தக்கண்காட்சி அமையவுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X