2024 மார்ச் 28, வியாழக்கிழமை

200 பேருக்கு டெங்கு நோய்க்கான அறிகுறி

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்டத்தில் 2014ஆம் ஆண்டின்  முதல் காலாண்டுப் பகுதியில் 200 பேருக்கு டெங்கு நோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை (17)  நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அனுஷ;டிக்கப்பட்டதுடன், டெங்கு நோய்க்கான  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும்; மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் கடந்த வருடத்தை விட, இவ்வருடத்தில் டெங்கு நோய் தாக்கம் குறைவடைந்துள்ளது.  டெங்கு நோயினால் இவ்வருடம் இதுவரையில் யாரும்; உயிரிழக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, விலங்கு விசர் நோய் தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்பட்டதுடன்,  நாய்களுக்கு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டன.  இந்நிலையில், விலங்கு விசர் நோய் கடிக்கு இலக்காகுபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. இதுவரையில் ஒருவர் மட்டுமே விலங்கு விசர் நோயால் உயிரிழந்துள்ளதாகவும் ஆ.கேதீஸ்வரன்  தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X