2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அரச சாராயத்தை சட்டவிரோதமாக வைத்திருந்தோருக்கு அபராதம்

Super User   / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சங்கவி)

அரச சாராயத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்தார் மற்றும் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவருக்கு தலா 5 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வேலணை, 4 ஆம் வட்டாரத்தில் 180 மில்லி லீற்றர் அரச சாராயத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்தார் மற்றும் 750 மில்லி லீற்றர் அரச சாராயத்தை வைத்திருந்தார் ஆகிய குற்றச் சாட்டுகளின் பேரில் ஒருவரும் வேலணை, அம்பிகை நகரில் அரச சாராயத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மற்றொருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நேற்று ஆஜர் செய்யப்பட்டனர்.

விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்றுறை நீதிமன்றப் பதில் நீதிபதி இருவருக்கும் தலா 5 அயிரம் ரூபா வீதம் அபராதம் வழங்கித் தீர்ப்பளித்தார். இல்லையேல் தலா 2 மாதங்களுக்குச் சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .