2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லேகியம் விற்ற வர்த்தகர்கள் கைது

Super User   / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                    (நவம்)

யாழ் மாவட்டத்தில் லேகிய விற்பனையில் ஈடுபட்ட பல வர்த்தகர்கள் கொழும்பில் இருந்து வந்த விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 கடந்த 30 ஆண்டு கால யுத்தம் காரணமாக  யாழ். மாவட்ட வர்த்தகர்கள் தமது செயற்பாடுகளை தமது மனம் போன போக்கில் நடத்தி வந்துள்ளனர்.

இதன் அடிப்படையில் வர்த்தக நிலையங்களில் எதனையும் எங்கும் விற்கலாம் என்ற மனோபாங்குடன் செயல்பட்டதுடன் வெறுமனே பிரதேச செயலகங்களில் பெறப்பட்ட அனுமதியுடன் வருடாந்தம் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் வரியுடனும் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள்.

தற்போதும் கூட அதன் அடிப்படையில் வர்த்தக செயல்பாடுகளை மேற்கொள்வதினால் தாம் விற்கும் பொருட்கள் அனைத்துக்கும் உரிய அரச அனுமதிப் பத்திரம் பெறப்பட்டு விட்டதாகக் கருதி தொடர்ந்தும் எல்லா வகையான பொருட்களையும் விற்கும் செயல்பாட்டையே முன்னெடுத்து வருகின்றார்கள்.

இந்நிலைமையில் கொழும்பில் இருந்து வந்த விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழுவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இவர்களை கைது செய்து நீதிமன்றங்களின் ஆஜர்படுத்தி பல இலட்சங்களை தண்டப் பணமாக செலுத்தும் நிலமைக்கு உள்ளாகியுள்ளனர்.

யாழ். மாவட்ட வர்த்தகர்களை பொறுத்த வரையில் இன்னும் தாம் எத்தகைய பொருட்களை வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்ய வேண்டும், விற்பனை செய்யக் கூடாது, எந்த வகையான அமைச்சில் இருந்து உரிய அனுமதிப் பத்திரங்களைப் பெற வேண்டும் என்ற விபரங்கள் தெரியாத நிலமையிலேயே காணப்படுகின்றார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X