2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யுத்தத்தால் செயலிழந்துபோன கைத்தொழில்கள் பற்றிய விவரங்கள் சேகரிப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் செயலிழந்துபோன கைத்தொழில்கள், தொடர்ந்து நடத்த முடியாமல் இடைநடுவே கைவிடப்பட்ட கைத்தொழில்கள், நிறுவனங்கள், முற்றாகச் சீர்குலைந்துபோன கைத்தொழில் முயற்சிகள் என்பன தொடர்பான விவரங்களை இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்திச் சபை சேகரித்து வருகின்றது.

இது குறித்து கைத்தொழில் அபிவிருத்திச் சபை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

யுத்தம் காரணமாக வடமாகாணக் கைத்தொழில்துறை மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளானது. உற்பத்திப்பொருள்களுக்கான தட்டுப்பாடு, தொடர்ச்சியான இடப்பெயர்வுகள், யுத்த அழிவுகள், தொழினுட்ப சாதனங்களைப் பெறுவதில் நெருக்கடி என்பன காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இயங்கிய கைத்தொழில்கள் நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டன.

எனினும், தற்போது போர் ஓய்ந்து, இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ள சூழலில் வடமாகாணத்தின் கைத்தொழில்துறையைக் கட்டியெழுப்புவதன் மூலமே நிரந்தரமான அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்.

எனவே சிதைந்து போன கைத்தொழில்துறையை மீளக்கட்டியெழுப்பும் வகையில் முதலில் வடமாகாணத்தில் செயலிழந்துபோன, தொடர்ந்து நடத்த முடியாமல் இடைநடுவே கைவிடப்பட்ட, முற்றாகச் சீர்குலைந்து போன கைத்தொழில்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

எனவே, இவ்வாறான பாதிப்புகளை பதிவு செய்ய விரும்புவோர் யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் உள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபை அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று அனுப்பிவைக்கமுடியும். -என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .