2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கனேடியத் தூதரக ஆலோசகர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

Super User   / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(தாஸ், சங்கவி)

யாழ். போதனா வைத்தியசாலையில் இருதய அறுவைச் சிகிச்சைப்பிரிவை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.வணிகர் கழகத்தினர், கனேடியத் தூதரகத்தின் ஆலோசகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்துள்ள கனேடியத் தூதரகத்தின் ஆலோசகர் பிரென்ஞ் ஜக், யாழ். ஆயர் இல்லத்தில் மதத்தலைவர்கள் மற்றும் பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதில் யாழ். சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான குழுவின் தலைவர் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, செயலாளர் பரமநாதன், யாழ். வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வர்த்தக சங்கத்தினர் குறித்த விடயம் தொடர்பான மகஜர் ஒன்றை கனேடியத் தூதரகத்தின் ஆலோசகரிடம் கையளித்தனர்.

இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ். போதனா வைத்தியசாலையில்  இருதய அறுவைச் சிகிச்சைப் பிரிவு இல்லாமையால் இங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கண்டி, கொழும்பு, காலி போன்ற வைத்தியசாலைகளுக்குச் செல்லவேண்டிய நிலையுள்ளது.

இங்கு இப்பிரிவை அமைப்பதன் மூலம் வடக்கு மக்கள் மட்டுமன்றி கிழக்கு மக்களும் நன்மையடைவர். – என்றுள்ளது.

altalt


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .