2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாணவர்களின் வளமான எதிர்காலத்திற்கு அனைவரும் அக்கறை காட்ட வேண்டும்: சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 14 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்களின் வளமான எதிர்கால வாழ்விற்கு அனைவரும் அக்கறையுடன் செயற்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஏழாலை தெற்கு அ.மி.த.கலவன் பாடசாலையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற  வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலச் சுழற்சியில் நவீன காலத்திற்கேற்ப எமது மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் யாவும் சிறப்பாக முன்னெடுக்கப்படுவதுடன், மாணவர்களது வளமான எதிர்காலத்திற்கு வழியமைக்கக் கூடியதாகவும் அமையவேண்டும்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தங்களால் எமது மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் மட்டுமல்ல கல்விச் சொத்தையும் இழந்துவிட்டோம். இழந்துபோன கல்வியை ஈடுசெய்ய வேண்டிய கடப்பாடு பாடசாலைகளுக்கு உண்டு என்பதுடன், தமிழ்மொழியை மட்டுமல்ல ஆங்கிலம், சிங்களம் போன்ற பிறமொழிகளையும் கற்பிக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.

எனவே, எமது எதிர்காலச் மாணவர்களின் வளமான சிறப்பான வாழ்வுக்காக நாமெல்லோரும் இணைந்து பணியாற்றுவதற்கு திடசங்கற்பம் பூணுவோம்.

அத்துடன், இந்தப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மக்களின் கோரிக்கைகள் யாவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையின் கீழ் முன்னெடுக்கவும் நாம் தயாராகவுள்ளோம்.

இந்நிகழ்வில் வலய கல்விப் பணிப்பாளர் குபேரதாஸ், ஈ.பி.டி.பியின் வட்டுக்கோட்டை பிரதேச  பொறுப்பாளர் மகேந்திரன் (வள்ளுவன்) வலிதெற்கு பிரதேச பொறுப்பாளர் அன்பு லயன் சீமாட்டி பூமாதேவி தேவா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .