2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலை சுத்திகரிப்பு தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 17 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். போதனா வைத்தியசாலையில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி உட்பட சம்பள உயர்விற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  நடவடிக்கை எடுத்துள்ளார்.  

இம்மாதம் 14ஆம் திகதி முதல் 'புளோர் கெயார்' என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த யாழ். வைத்தியசாலையின்; சுத்திகரிப்பு பணியாளர்கள் சம்பள உயர்வு கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்;தனர். இந்நிலையில் அன்றையதினம் அங்கு சென்ற அமைச்சர் பணியாளர்களுடன் கலந்துரையாடி சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும்  பணிப்புறக்கணிப்பை நிறுத்தி கடமைக்குத் திரும்புமாறும் கேட்டுக்கொண்டதற்கிணங்க பணிப்புறக்கணிப்பு உடனடியாகவே கைவிடப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு சுத்திகரிப்பு பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாளாந்த சம்பளமாக 425 ரூபாவும் ஊழியர் சேமலாப நிதி உரிமையும் வழங்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்தார்.

வைத்தியசாலையின சுகாதாரத்தை கருத்திற்கொண்டு அனைவரும் கடமையுணர்வுடன் பணியாற்றவேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டார்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X