2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'யாழில் இராணுவத்தினர் தங்கியுள்ள பொதுமக்களின் சொத்துக்கள் விரைவில் கையளிக்கப்படும்'

Super User   / 2010 டிசெம்பர் 16 , பி.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் தற்போது தங்கியிருக்கும் பொதுமக்களின் சொத்துக்கள் அனைத்தும் அம்மக்களிடம் மீண்டும் கையளிக்கப்படும் என்று யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்தார்.


பிலிப்பைன்ஸ் நாட்டின் குஷி விருதை வென்றதைப் பாராட்டும் முகமாக டான் தொலைக்காட்சி நிறுவனம் யாழ் கத்தோலிக்க அச்சக மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை  ஒழுங்குபடுத்தியிருந்த நிகழ்வில் உரையாற்றும்போதே மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க இவ்வாறு கூறினார்.
அங்கு அவர்  மேலும் உரையாற்றுகையில்,


'சுபாஷ் ஹோட்டலை விரைவில் உரியவர்களிடம் கையளிக்கவுள்ளோம். ஞானம்ஸ் ஹோட்டல் ஏற்கனவே இயங்கத் தயாராகிவிட்டது. இதுபோல் யாழ்ப்பாணத்தில் தற்போது இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள இடங்களிலிருந்து விரைவில் வெளியேறிவிடுவார்கள்.   உங்களுடைய நிலங்களை உங்களிடமே தந்துவிட்டு நாம் வேறிடங்களுக்குப் போய்விடுவோம். பயப்படாதீர்கள்' என்றார்.
 

எமக்குக் கொஞ்சம் கால அவகாசம் தாருங்கள். படிப்படியாக எல்லாம் நடந்தேறும் என்று மேலும் தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்திலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களும் மீண்டும் பொதுமக்களிடம் கையளிக்கப்படும் என்று இங்கு தெரிவித்த ஹத்துருசிங்க, கண்ணிவெடியகற்றும் பணிகளை நிறைவுசெய்யவேண்டியிருப்பதாலேயே இதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
 

இந்த நிகழ்வில், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின், அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ஸ்ரீ சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள், தென்னிந்திய திருச்சபை ஆயர் டி.எஸ்.தியாகராசா, யாழ் நாகவிகாரை விகாராதிபதி ஸ்ரீ விமலசிறி தேரர், மௌலவி ஏ.என்.ஏ.அசீஸ் ஆகியோரும் கலந்துகொண்டு வாழ்த்துரைகளை வழங்கினர்.

(படப்பிடிப்பு : தாஸ்)

--


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .