2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யாழ்.நகரில் நவீன வர்த்தக நிலைய தொகுதி

Menaka Mookandi   / 2011 ஜனவரி 12 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். நகரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் நவீன வர்த்தக நிலையத் தொகுதி தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் அப்பகுதிக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

முன்னதாக கஸ்தூரியார் வீதியில் நகரக் குளத்திற்கு அண்மையாக அமைந்துள்ள வர்த்தக உரிமையாளர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார். இதன்போது அமையப் பெறவுள்ள நவீன வர்த்தக நிலையத் தொகுதியில் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு செய்து தரப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு 4 மாத கால அவகாசம் தேவையென்றும் புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பும் ஒத்தாசையும் வழங்க வேண்டுமென்றும் இவ்விடயம் தொடர்பில் யாழ் மாநகர முதல்வரிடம் தொடர்பு கொண்டு விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து அப்பகுதியில் அமையப் பெற்றுள்ள பாரவூர்தி, துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் தரிப்பிடங்களையும் பார்வையிட்ட அமைச்சர் நகரக் குளத்தையும் அதன் சுற்றுப் புறத்தையும் பார்வையிட்டார்.

அத்துடன் குறிப்பிட்ட வாகனங்களின் தரிப்பிடங்களை மாற்றுவது தொடர்பிலும் ஆராய்ந்துள்ளதுடன், மின்சார நிலைய வீதியில் மருத்துவமனைக்கு அருகிலுள்ள பொதுக் கிணற்றையும் அதன் வளாகத்தையும் அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X