2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக இயங்கும் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

Kogilavani   / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.வலிகாமம் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக இயங்கும் வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

அவ்வர்த்தக நிலையங்களில் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கும் வர்த்தக நிலையங்கள் சீல் வைத்து மூடப்படவுள்ளதாகவும் அப்பணிமனை தெரிவித்துள்ளது.

எனவே வர்த்தக நிலைய உரிமையாளர்கள் அனைவரும் தங்களது பிரதேச சபையிடம் 2011 ஆம் ஆண்டுக்கான வியாபார உரிமப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் தவறும் பட்சத்தில் அவ் வர்த்தக நிலையத்தை சட்டரீதியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேலும் தெரிவித்துள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X