2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வலி. வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கான உட்கட்டமைப்புப் பணிகள் ஆரம்பம்

Super User   / 2011 ஜூன் 14 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வலி. வடக்கு தெல்லிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கான உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்கள் இன்று செவ்வாய்கிழமை மாலை தெல்லிப்பளை வீரகாமம் பாடசாலையில் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மீளக்குடியேறிய மக்;களின் போக்குவரத்து வசதிகள், குடிநீர் சேவை போன்ற அடிப்படைக் கட்டமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மீளக்குடியேறிய மக்களக்கான 28 வீதிகள் புதிதாக அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவைபவமும், 2 வைத்தியசாலைக்கான அடிக்கல்லும், பலநோக்கு கூட்டறவுச்சங்கம் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.

இந்நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலளர் முரளிதரன் பிரதேச செயல அலுவலர்கள் திணைக்களத் தலைவர்கள் மற்றும் மீளக்குடியேறிய பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .