2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

த.தே.கூட்டமைப்பு வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இராணுவத்தினர் புகுந்து தாக்கியதாக புகார்

Super User   / 2011 ஜூன் 16 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன், கவிசுகி, சுபுன் டயஸ்)

வலி வடக்கு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் அறிமுக விழா  அளவெட்டி மகாஜனசபை மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு புகுந்த இராணுவத்தினர் கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்ததாகவும்  அங்கிருந்தவர்களை தாக்கி விரட்டியதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெல்லிப்பழை பொலிஸில் புகாரிட்டுள்ளது.

இது தொடர்பாக மாவை சேனாதிராஜா எம்.பி. தமிழ் மிரர் இணையத்தளத்திடம் கூறுகையில்

"தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான நான், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, கே. சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டம் அளவெட்டி மகாஜனக் கல்லூரியில் நடைபெற்றுகொண்டிருந்தபோது நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் புகுந்து கூட்டம் நடத்தமுடியாது எனக் கூறி அங்கிருந்தவரக்ளை தாக்கினர்.

அப்போது எமது மெய்ப்பாதுகாவலர்களான பொலிஸார்  தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டபோது அவர்களும் தாக்கப்பட்டனர்.

இதனால் பலர் காயமடைந்தனர். சரவணபவன் எம்.பி. உரையாற்றிக்கொண்டிருந்த ஒலிவாங்கியும் வீசி எறியப்பட்டது. இது தொடர்பாக நாம் தெல்லிப்பளை பொலிஸ்நிலையத்தில் புகாரிட்டுள்ளோம்.  பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடமும் நான் புகாரிட்டுள்ளேன்" என்றார்.

ஆனால் , பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இக்குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

இது தொடர்பாக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க கூறுகையில், "இராணுவத்தினர் வழமைபோல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கூட்டமொன்றை நடப்பதை அவதானித்தனர். என்ன நடைபெறுகிறது  என அங்கிருந்தவர்களிடம் இராணுவத்தினர் விசாரித்தனர். தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது கூட்டம் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளதாக என இராணுவத்தினர் விசாரித்தனர். அனுமதி பெறவில்லை எனக் கூறப்பட்டது. எனவே அனுமதியில்லாமல் கூட்டம் நடத்தமுடியாது என இராணுவத்தினர் கூறினர். அப்போது எம்.பி.களின் மெய்ப்பாதுகாவலர்களான பொலிஸார் இருவர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் இராணுவத்தினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்'"என்றார்.

"இப்பகுதியில் எந்தக்கட்சியும் கூட்டம் நடத்துவதில் எமக்குப் பிரச்சினை எதுவுமில்லை.  இப்பகுதியில் எல்லா இடங்களிலும் இராணுவத்தினர் உள்ளனர். எனவே இங்கு என்ன நடைபெறுகிறது என்பதை இராணுவம் அறிந்திருக்க வேண்டும்" எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • Jeewan Friday, 17 June 2011 02:27 AM

    வாழ்க ஜனநாயகம்

    Reply : 0       0

    Hot water Friday, 17 June 2011 02:54 AM

    மனிதாபிமான நடவடிக்கையா?

    Reply : 0       0

    Ruban Friday, 17 June 2011 03:41 AM

    வாழ்க ஹத்துருசிங்க ஆட்சி ........

    Reply : 0       0

    ajan Friday, 17 June 2011 05:28 AM

    ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இ ஊடகவியலார்களுக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை?
    மக்கள் பாவம் பேசகூட முடியாமல் இருக்கிறார்கள்.
    அரச **** உச்சம் . இனிமேல் சிங்க வசந்த ஆட்சி.
    வடக்கின் வசந்தம் . இதில் ஆச்சரியப்பட எதுமே இல்லை. இன்னும் நடக்கும்.
    இங்கு தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை இது தெளிவாக காட்டுகிறது.

    Reply : 0       0

    xlntgson 0776994341;0716597735 sms only Sunday, 19 June 2011 09:03 PM

    "இதற்கு சரியான பதில் கூறவில்லை என்றால் உன் தலை வெடித்து சிதறி விடும் என்று வேதாளம் கூறிற்று- விக்ரமாதித்யன் சரியான பதிலை கூறி விட்டான்- வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது."
    கேள்வி: தமிழர் பிரச்சினைக்கு யார் காரணம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .