2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 20 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துள்ள  வன்முறைச் சம்பங்களை கண்டித்து இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

யாழ். மனித உரிமைகள் இல்லத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்  பெண்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமெனக் கோரப்பட்டது.

கறுப்புத் துணிகளினால் வாய்களைக் கட்டியவாறு பெண்கள், தங்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரிய சுலோகங்களைத் தாங்கி நின்றனர்.

'பெண்கள் உரிமையும் மனித உரிமையே', 'பெண்களை பெண்களாக மதித்து நட', 'பெண்களை பாலியல் பொருளாக்காதே', 'பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளிவை' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களைத் தாங்கியவாறும் உரிமைக் கோஷங்களை எழுப்பியவாறும் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜந்து மாதங்களின் 50 பெண்கள் யாழ்ப்பாணத்தில்; தற்கொலை செய்துகொண்டனர். குடும்ப வன்முறைகளில் 18 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். சிசுக் கொலைகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துக்கொண்டு செல்வதாக  இந்த ஆர்பாட்டத்தை ஒருங்கமைத்த யாழ். மனித உரிமைகள் இல்லம் தெரிவித்தது.

பாடசாலைகளிலும் பஸ்களிலும் வீதியோரங்களிலும்   பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தலை தூக்கியிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஆண்கள் இருவரும் பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .