2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கட்டாக்காலி நாய்களுக்கு விசர்நோய்த் தடுப்பூசியும் அறுவைச் சிகிச்சையும்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 20 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ்ப்பாணத்தில் கட்டாக்காலி நாய்களுக்கு விசர்நோய்த் தடுப்பூசியும் கருத்தடை அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த புதன்கிழமை முதல் உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். மாநகரசபை, யாழ். நகர், யாழ். போதனா வைத்தியசாலை, நல்லூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த கட்டாக்காலி நாய்களுக்கு யாழ். போதனா வைத்தியசாலைப் பகுதியிலும் கருத்தடை அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன்,  விசர்நோய்த் தடுப்பூசியும் போடப்பட்டது.
சுகாதார அமைச்சின் அனுமதியுடன் சுனாமி கால்நடை மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த வைத்தியர்களான றோசான் பெர்ணான்டோபிள்ளை, தமித்த மாபிட்டிய, மஞ்சுளா ஜெயசிங்க மற்றும் கால்நடை வைத்தியப் பிரிவைச் சேர்ந்த தாதியர், நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகரும் இணைந்து கட்டாக்காலி நாய்களுக்காக நிரந்தர கருத்தடை அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட கட்டாக்காலி நாய்களுக்கு  விசேட றோஸ் நிற கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டு அவைகளின் காதில் அடையாளம் இடப்பட்டு நாய்கள் பிடிக்கப்பட்ட இடத்தில்  திரும்பவும் வாகனத்தில்   கொண்டுசென்று விடுவிக்கப்படுகிறது.  
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் கட்டாக்காலி நாய்களுக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளுமாறும் தடுப்பூசி போடுமாறும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X