2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வடமாண பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு காணப்படும்: கல்வி அமைச்சர் பந்துல

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வட மாகாணத்தின் பாடசாலைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அப்பாடசாலைகளின் வளர்ச்சிக்கு கல்வி அமைச்சு தன்னாலான உதவிகளைச் செய்யும் என கல்வி அமைச்சர் பந்துல குணவரத்தன தெரிவித்தார்.

இன்று செவ்வாய்கிழமை காலை யாழ். நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வடமாகாணத்தின் கல்வி நிலைமைகள் தொடர்பானவும் பாடசாலைகளின் ஆளுமை அபிவிருத்தி தொடர்பான மாநாட்டின் போதே அவர் இவ்விதம் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், 'வட மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு இந்த தவணை முடிவதற்கு முன்னர் நேரில் விஜயம் மேற்கொண்டு பாடசாலைகளின் தற்கால நிலைமைகள் தொடர்பாக அறியவுள்ளேன்.

பாடசாலைகளில் நிலவும் ஆளுமை குறைபாடுகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் அத்தோடு தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்' என்றார். 

இந்த நிகழ்வில் வடமாகாண பாடசாலைகளின் அதிபர்கள் தங்களின்  பாடசாலைகளின்  நிலைமைகள், தேவைகள் குறித்து கல்வி அமைச்சருக்கு மனு கொடுத்ததுடன் தற்கால கல்வி நிலைமைகள் தொடர்பாக விளக்கிக் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .