2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழில். இந்திய வீட்டுத்திட்டத்தின் முதல் கட்ட வீடுகள் நவம்பரில் மக்களிடம் கையளிப்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 01 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் இந்திய வீட்டுத்திட்டத்தின் முதல் கட்ட வீடுகள் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதியில் யாழ்.மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக இந்திய வீட்டுத் திட்டத்தின் இணைப்பாளர் கே.காத்திக் தெரிவித்துள்ளார்

யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலமையில் நடைபெற்ற விஷேட மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசு தந்த ஒத்துழைப்பின் காரணமாக யாழ்ப்பாணத்தில் முதல்கட்டமாக 150 வீடுகள் கட்டி முடிவடையும் தருவாயில் இருக்கின்றன. இவ்வீடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி யாழ். மக்களின் கைகளில் ஒப்படைக்கக் கூடியதாக இருக்கும்.

யாழ்ப்பாண மக்களின் குடியியல் வாழ்வுக்காக இந்திய அரசு பல வேலைத்திட்டங்களை செய்துள்ளது. எதிர்வரும் காலங்களில் யாழ்.மக்களுக்கு இன்னும் பல வீடுகளைக் நிர்மாணித்துக்கொடுப்பதற்கு இந்திய அரசு தீர்மானித்துள்ளது.  

இந்திய வீட்டத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் மிகவும் நெருக்கடிகளைச் சந்தித்தோம். ஆனால் அம்மக்களின் வாழ்வியலுக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ற மாதிரியான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது மிகவும் சந்தோசம் தரும் விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .