2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'இலங்கைக்கு மீளத் திரும்புதல்' யாழ். நூலகத்தில் கண்காட்சி

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 05 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

'இலங்கைக்கு மீளத் திரும்புதல்' என்ற கருப்பொருளில் யாழ். நூலகத்தில் இன்று புதன்கிழமை கண்காட்சி ஒன்று நடைபெற்றுள்ளது. காலனித்துவ காலப்பகுதிக்குரிய இலங்கை வரலாற்றின் சுவடுகளை நிலவுருப் படங்களாகவும் கையெமுத்துப் பிரதிகளாகவும் புகைப்படங்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கைத் தீவினுடைய சுமார் 300 வருடகால வரலாற்றை ஆவணப்படுத்தும் திட்டத்தின் வெளிப்பாடாக இந்த கண்காட்சி அமையப்பெற்றுள்ளது. இந்தக் கண்காட்சியை பிரித்தானிய நூலகம் மற்றும் பிரிடிஷ் கவுன்சிலினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கு பிரிடிஷ் கவுன்சிலிர் ரொனி ரியானி, யாழ்.பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் மற்றும் யாழ். நகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, வடமாகாண ஆளுநரின் செயலர் ஆ.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .