2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான நடவடிக்கைக்காக யாழ்.பொலிஸில் விசேட பிரிவு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழில். சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை இனம்கண்டு நடவடிக்கை எடுப்பதற்காக யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒரு பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவுக்கு தமிழில் நன்கு பரிவர்த்தனை செய்யக் கூடிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் நீல் தலுவத்த தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில  சிறுவர் தினம் இன்று சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
யாழ்.பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சிறுவர் தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'வெளிநாடுகளை விட நம் நாட்டுப் பாடசாலைகளில் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு குறைந்து காணப்படுகிறது. அதன் காரணமாக சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றிய முறைப்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

சிறுவர்களை பாலியல் ரீதியாக யாரும் அணுகி அவர்களை துன்புறுத்துவார்களானால் பெற்றோர்கள் உடனடியாக எம்மிடம் முறையிடுங்கள். நாங்கள் குற்றமிழைப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.

பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு பாதிக்கப்படும் என பயந்து சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களை மறைக்க வேண்டாம். அவ்வாறு மறைக்க முயலும் போது பாதிக்கப்படுவது பிள்ளைகளின் எதிர்காலமே என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்'' என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ்.பிராந்தியப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா, யாழ்.பொலிஸ் தலமைமையதிகாரி சமன் சிகேரா, பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X