2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை பொலிஸாரால் முன்னெடுப்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 15 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்று வரும்  குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸார் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்து வருவதுடன்,  குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை எச்சரித்தும் வருகின்றனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,  கிராம அலுவலர் பிரிவுகள் தோறும் ஒவ்வொரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொலிஸ் உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர்களுடன் இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படும் வகையில் மதுபோதையில் வீதிகளில் குழப்பம் விளைவிப்பது,   வீதியால் செல்லும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது,  சந்திக்குச் சந்தி ஆறு மணிக்கு கூடிநின்று குழப்பம் விளைவிப்பது. பொதுவிடங்களில் மதுபாவனையில் ஈடுபடுவது, அடுத்தவர்களின் நடமாட்டத்திற்கு இடைஞ்சலாக இருப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்படுமென ஒலிபெருக்கிகள் மூலம் பொலிஸார் அறிவித்து வருகின்றனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டாரவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .