2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நீர்வேலியில் கலை பண்பாட்டுப் பெருவிழா

Menaka Mookandi   / 2011 நவம்பர் 18 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

நீர்வேலி கலை பண்பாட்டு மன்றம் நடத்தும் கலை பண்பாட்டுப் பெருவிழா நாளை சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் முன்றிலில் இடம்பெறவுள்ளது.

யாழ். வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் மன்றத் தலைவருமாகிய இ.குணநாதன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், கொக்குவில் மேற்கு சீ.சீ.த.க. பாடசாலை ஆசிரியர் கிருபாகரி இளங்கோவன் ஆகியோர் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வர்.

சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் ம.பிரதீபன், இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் சி.கௌரிசங்கர், யாழ். மாவட்டச் செயலகக் கணக்காளர் ச.குகதாஸ், கிளிநொச்சி மாவட்ட உதவி விவசாயப்பணிப்பாளர் ச.சதீஸ்வரன், வலிகாமம் கிழக்கு கலாசார உத்தியோகத்தர் அ.மிலாசினி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நீர்வேலிக் கிராமத்தின் பெருமைகளை எடுத்தியம்பும் வகையில் 'திருநீர்வை' என்ற மலரும் 'அழகொளிரும் நீர்வேலி' என்ற இறுவெட்டும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளன. இதன் வெளியீட்டுரையை யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி ஆற்றுவார். முதற்பிரதிகளை யாழ்ப்பாணம் தகைவைர நகைத் தொழிலதிபர் கனகரத்தினம் கிருபாகரன் பெற்றுக்கொள்வார். மலரின் பதிப்பாசிரியரும் விரிவுரையாளருமாகிய ச.லலீசன் ஏற்புரை நல்குவார்.

கிராமத்தின் பெருமைக்காக உழைக்கும் சான்றோர்களான நீர்வைமணி கு.தியாகராசக் குருக்கள், சமூகசோதி த.பரராசசிங்கம், தேர்ச்சிற்ப வல்லுநர் செல்லையா விஸ்வலிங்கம் ஆசாரி, சமூகசேவகி திருமதி ஏ. ருக்மணி, முன்னாள் கிரமிய வங்கியாளர்  எஸ்.கே. முருகையா கலாபூசணம் வே. சிதம்பரநாதன் ஆகியோர் நீர்வைக் குரிசில் என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர். நீர்வேலியில் பேணப்பட்டு வருகின்ற வசந்தன் கூத்து, சத்தியவான் சாவித்திரி இசை நாடகம், ஒயிலாட்டம் முதலிய கலை ஆற்றுகைகளும் இடம்பெறவுள்ளன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .