2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் அணி: வடபிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரன்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 23 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக கொலை, ஆயுதமுனையில் கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனை போன்ற சமூகவிரோதக் குற்றங்கள் அதிகரித்துச் செல்வதாக வடபிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.இந்திரன் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் நிலவுகின்ற குற்றச்செயல்களையும் வீதி விபத்துக்களையும் கட்டுப்படுத்துவதற்காக யாழ். குடாநாட்டிலுள்ள 17 பொலிஸ் பிரிவுகளிலும் விசேட பொலிஸ் அணி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

யாழ். குடாநாட்டில் பொலிஸார் 24 மணிநேரமும் வீதிரோந்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்த அவர், மக்களின் பாதுகாப்புக்காக விசேட திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படுமெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .